போராட்டங்களை நடத்தி நெக்ஸ்ட் ஊழியர்கள் போனஸை பெற்றுக்கொண்டனர்!
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள சர்வதேச ஆடை நிறுவனத்தின் ஊழியர்கள் குண்டர்களின் எதிர்ப்பையும் மீறி, ஆண்டிறுதி போனஸில் பாதியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.தொழிற் திணைக்கள அதிகாரிகள், ஆடை நிறுவன நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்குப் பின்னால், நெக்ஸ்ட் நிர்வாகம் ஊழியர்களுக்கு 50 சதவீத போனஸை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.