காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு 1414 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இவ் ஆண்டு ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முக்கிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.