கொவிட் தொற்றால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவு எடுக்கும் வரை சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்க அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது நீதி அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாகவும் குநிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தலைமை நீதித்துறை அலுவலகங்கள் மற்றும் கல்முனையில் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களுக்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தகைய பின்னணியில், கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு உடல்களை குளிர்விக்க கொள்கலன்கள் வழங்கப்பட்டன, அவற்றில் உடல்கள் நேற்று (21)சேமிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் அரசாங்கம் அத்தகைய இடைக்கால முடிவை எட்டியுள்ளதாகவும், அத்தகைய இடைக்கால முடிவை எடுக்க பசில் ராஜபக்ஷ தனது முழு ஆதரவையும் அளித்ததாகவும் மூத்த அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி