டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 65 வயது சீக்கிய மதகுரு சந்த் பாபா ராம் சிங் புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. ஹரியாணா மாநிலம், கர்னால் அருகே உள்ள சிங்காரா கிராமத்தை சேர்ந்தவர் இவர்.

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து மாலைதீவு அரசாங்கம் தெரிவித்திருப்பதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை நிபுணர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மதநம்பிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹ்மெட் சஹீட் இதனை தெரிவித்துள்ளார்.

நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம்.

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 11 பேர் மரணடைந்திருந்தனர்.

கொரோனா தொற்றுநோயால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நிலத்தை பெருவது சம்பந்தமாக அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இலங்கை ஜனாதிபதி மாலைதீவுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

பொலிஸார் உள்ளிட்ட அரச பாதுகாப்பு அமைப்புகளால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் இலங்கையில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து கலந்தாலோசிக்க அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனது வீட்டுக்குச் செல்வதற்குப் பாதையொன்று இன்மையால் மாத்தறை நகர சபைக்கு முன்னால் அமைந்துள்ள மின் கம்பத்தில் ஏறி நபரொருவர் நேற்று காலை எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினார்.

கொரோனா பாணி ஒரு உளவியல் நடவடிக்கை என்று சமூக மற்றும் அரசியல் ஆய்வாளர் தீப்தி குமார குணரத்ன கூறுகிறார்.
தீப்தி இதை 'voicetube.lk' க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின், அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்தியமைக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி