தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில், கடந்த 18ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய

நபர், இன்று (25) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில், கஹதுடுவ – பலகம, கெடலோவிட்ட பிரதேசத்தில் வெறிச்சோடியிருந்த வீடொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது, அங்கு மறைந்திருந்த குறித்த சந்தேகநபர், விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

பின்னர், விசேட அதிரடிப்படையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேற்படி சந்தேநபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த துப்பாக்கிதாரியின் சடலம், மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி