கொரோனா தொற்றுநோயால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நிலத்தை பெருவது சம்பந்தமாக அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இலங்கை ஜனாதிபதி மாலைதீவுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மாலைதீவுகளிடம் கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதி சடங்குகளை நடத்த உதவுமாறு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைதீவு வெளியுறவு அமைச்சர் தெறிவித்துள்ளார்.

இருப்பினும், அரசாங்கம் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, "அரசாங்கம் அத்தகைய முடிவை எடுக்கவில்லை" என்று கூறினார்.

ஒரு நிபுணர் குழுவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் முடிவுகளை எடுக்கிறது என்றும் இது தொடர்பாக பிரதமரோ அமைச்சரவையோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு மாலைதீவு வெளியுறவு அமைச்சர் இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அமைச்சர் ரம்புக்வெல்ல இதுபோன்ற எதுவும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்றார். 

கொரோனா தொற்றுநோயால் இறக்கும் முஸ்லிம்களை தங்கள் தாயகத்தில் அடக்கம் செய்ய இலங்கை ஜனாதிபதி அனுமதிக்கவில்லை என்பதை மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மாலைதீவில் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் அவரது ட்வீட்டரில் மாலைதீவில் கொவிட் 19 ல் இறக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய ரீதில் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு ஆதரவளிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சிறப்பு கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி மொஹமட் இப்ராஹிம் சோலி அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.

மாலைதீவு வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட வெளிப்பாடுகள் குறித்து ஜனாதிபதி செயலகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அரசாங்கத்தின் தலையீட்டால் இலங்கையர்களை வேறொரு நாட்டில் அடக்கம் செய்வது அவர்களின் மனித உரிமை மீறும் செயல் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி