பிரதான எதிர்கட்சிகள் புறக்கணித்த வெனிசுவேல பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவின் கட்சி மற்றும் அவரது கூட்டணி வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்ப முடிவுகள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஐந்து வருடங்களில் பதினைந்து பொலிஸ் அதிகாரிகள் குற்றங்களை தடுக்கும் சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி நேற்று அதிகாலை 5 மணிமுதல் காத்திருந்தனர். இவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக பசளை மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் காத்திருந்தனர். 

பிரிட்டனில் பைசர் - பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்–19 நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பமாகிறது. அந்தத் தடுப்பு மருந்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவிருக்கும் முதல் நாடாக பிரிட்டன் மாறவுள்ளது. 

கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெல்லி அருகே நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து கிளம்ப முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ரயில் மூலம் டெல்லி சென்று எப்படியோ போராடும் விவசாயிகளோடு போய்ச் சேர்ந்துகொண்டனர்.

இணையத்தள ஊடகவியலாளரான முருகப்பிள்ளை கோகிலதாசன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் 14 நாட்களுக்கு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஹட்டன் நகரில் இன்று (06) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற வாசகம் அப்படியே சொற்களோடு மட்டும் நின்றுவிடாது, நாட்டை நேசிக்கும் உண்மையான ஒரு தேசபக்தன் அதை எவ்வாறு யதார்த்தமாக்குவது என்று உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலை மோதல் குறித்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மைத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின்போது, முக்கியமான சுற்றுச்சூழல் விடயங்களை கருத்திற்கொள்ளப்படாமையை வலியுறுத்தி பொலன்னறுவையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மாதுருஓயா, வஸ்கமு, சோமாவதி, போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணப் பணியை உடனடியாக நிறுத்துமாறு பொலன்னறுவையில் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதகதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களை தடுத்து நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். 

கொரோனா தொற்றுநோயை ஒழிக்க நேரடியாக பங்களிக்கும் "1990 சுவசெரிய" அம்பியுலன்ஸ் சேவையின் குறைபாடுகளையும் தகவல்களையும் மறைக்க தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு அதன் நிர்வாக அதிகாரி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தொழிற்சங்க அமைப்பு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஒரு தொழிற்சங்க அமைப்பின் தலைவரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளுக்கும் அக்குரணையில் 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே குறிப்பிட்டுள்ளார். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி