மொட்டுவின் அடுத்த தலைவர் கோட்டா அல்ல பசில்!
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைக் குழுவின் தலைவர் கலாநிதி மஹிந்த பதிரன தெரிவித்துள்ளார்.
சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைக் குழுவின் தலைவர் கலாநிதி மஹிந்த பதிரன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் அறிக்கையினை ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவை ஏற்கமுடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில், கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி தாய்மார்கள் கண்ணீர் மல்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை, அம்முன்னணி அதிகாரபூர்வமாக வெளியேற்றியுள்ள நிலையில், திலகர் அணி உறுப்பினர்கள் சிலரும் தாமாகவே வெளியேறிவருகின்றனர்.
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் இன்று பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.
தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.மக்கள் நீதி கட்சி மய்யக் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது அரசியல் அரங்கில் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டார் இதனடிப்படையில், 'சமகி ஜன பலவேகய' கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
"எங்கள் அரசியல் குடியுரிமை வெறும் அச்சுத்தாளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.எவ்வாறாயினும், சட்டவிரோதமாகவும், அநாகரீகமாகவும், ஊழல் ரீதியாகவும் குடியுரிமை பெறுவதற்கான உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோற்கடிக்கப்படும் ”என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2024 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19) மாலை அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட 12 அரசு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை சந்திக்க வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களைக் கண்காணிக்க காவல் நிலையங்களுக்கு அழைத்து மஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பார்க்கவோ பகிரவோ முடியாத படி, அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம் தன் பயனர்களை முடக்கி இருக்கிறது.
பாரபட்சத்தின் காரணமாக சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தை நிறுத்த பிரதமரும் அரசாங்கமும் பின்வாங்குவது கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.