போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தெற்கிலிருந்து கோரிக்கை!
பேலியகொட காவல் நிலையத்தில் வைத்து சட்ட த்துறை மாணவன் மிகார குணரத்ன மீது கொடூர தாக்குதல்!
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்டத்துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடக்கில் நடந்து கொண்டிருக்கும் அரச ஆதரவுடனான நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்! video
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் கரந்தையில் வசிக்கும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை உடைத்தெறிந்து காணிகளிலிருந்து அவர்களை விரட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றுள்ளது.
சஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்காமை குறித்து ஆணைக்குழுவிடம் கேள்வி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய சந்தேகநபர் தொடர்பில், நன்கு அறிந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படாமை குறித்து, இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வரும் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்புகளை வழிநடத்தும் தாய்மார்களைத் தலைநகருக்கு அழைத்து துன்புறுத்துவதாக, இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பௌத்தர்களின் உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வர மாட்டேன்! நீதி அமைச்சர் அலிசப்ரி
நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை, எந்த வகையிலும் 2500 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இலங்கையில் பௌத்த சட்டத்தை ரத்து செய்வதோ அல்லது திருத்துவதோ எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், அவ்வாறு செய்ய வேண்டும் என்று நான் கனவுகூட கண்டதில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் சார்பாக இம்ரான்கானிடம் கோரிக்கை!
இலங்கையில் முன்னெடுக்கப்படும் கட்டாய தகன விடயத்தில் தலையீடு செய்யவும், ஜெனீவாவில் அரசாங்கத்தை ஆதரித்து, தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட வேண்டாம் எனவும் இலங்கை முஸ்லிம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
செய்திகளை பகிர கூகுல் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும்! அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்
கூகுல் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளத்தில் செய்திகளைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிற சட்டத்தை அவுஸ்திரேலியா நிறைவேற்றியது.
பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள்! நடந்ததை சொல்கிறார் நா.உ.முஷர்ரப்
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) பிற்பகல் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
பூசா சிறைச்சாலை பற்றிய ஒரு எச்சரிக்கை!
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றதைப் போன்று, ஒரு படுகொலையை பூசா சிறைச்சாலையிலும் மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என, கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி குழு கேள்வி எழுப்பியுள்ளது.
சீலரத்ன தேரர் கிரிக்கெட் உப தலைவர் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார்!
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை பத்ரமுல்ல சீலரத்ன தேரர் கையளித்துள்ளார்.
மகனைக் காணாமலேயே தாயார் மரணம்! காணாமல் போன மகனைத் தேடிய மற்றொரு தாயின் சோகம்!
காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதி கோரி வந்த தாயொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது-61) என்ற தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார்.
மைத்ரிபால ரணில் சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐதே.க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டில்லை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதன் பிற்பாடு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.