"எங்கள் அரசியல் குடியுரிமை வெறும் அச்சுத்தாளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.எவ்வாறாயினும், சட்டவிரோதமாகவும், அநாகரீகமாகவும், ஊழல் ரீதியாகவும் குடியுரிமை பெறுவதற்கான உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோற்கடிக்கப்படும் ”என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கெகில் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நேற்று (18) ஹைட் பார்க்கில் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்த பேரணியில் அவர் கருத்து தெரிவிக்கும் போது

'​ஆணைக்குழு தலைவர் ஊழல் நிறைந்தவர்'

"சுற்றுச்சூழல், பொருட்களின் விலையேற்றம் பொருளாதாரம், மோசடி மற்றும் ஊழல் தேசிய வளங்களை விற்பனை செய்வது போன்ற பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒருபுறம் இருக்க, கோதபாய ராஜபக்ஷவின் மிகப்பெரிய முயற்சி, அவர் மற்றும் அவரது நண்பர்களை வழக்குகளில் இருந்து விடுவிப்பதுதான்.

அதற்கு ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்னவின் ஊழல் குறித்து புத்தகங்களின் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர் நீதித்துறையில் ஊழல் நிறைந்த நபர் என்று கூறியுள்ளனர்.

அவர் பாதிக்கபட்டவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கவில்லை, அவரது நண்பர்கள் விரும்பியபடி தீர்ப்பை எழுதினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழு அவர் ஊழல் மிக்கவர் என்று தீர்ப்பளித்தது. நீதித்துறை சேவை ஆணைக்குழு அவரை கட்டாய விடுப்பில் அனுப்பி ஓய்வு பெறச்செய்தது.

ஆணைக்குழுவின் அடுத்த உறுப்பினர் முன்னாள் ஐ.ஜி.பி சந்ர பெர்னாண்டோ ஆவார். ஒரு உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் அடிப்படை உரிமைகள் வழக்கில் தண்டணை பெற்றவர். அந்த குற்றத்திற்காக அவர் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து ரூ .100 செலுத்த வேண்டியிருந்தது.

இத்தகைய ஊழல் நிறைந்த நபர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு எங்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது எங்களை நீதிமன்றத்திற்கு அழைக்கவோ அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.

வலஸ்முல்ல நைகலா ராஜமஹா விஹாரதிபதி வகாமுல்லே உதிதா தேர்ர், பேராசிரியர் ஹினிடுமா சுனில் செனேவி, மூத்த வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார, நடிகர் ஜகத் மானுவர்ண, வழக்கறிஞர் நாமல் ராஜபக்ஷ, சரோஜா சாவித்ரி,போல் ராஜ், பேராசிரியர் விஜய குமார் ஐக்கிய இடது சாரி முன்னணியின் மஹிந்த ரத்நாயக்க ஜே.வி.பி யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவும் கூட்டத்தில் உரையாற்றினார்.

PMD 2021.02.19 2

PMD 2021.02.19 3

PMD 2021.02.19 4

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி