உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட நபரொருவரை பற்றி அறிந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இராணுவ தளபதிக்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றை எடுத்து உதவி பெற முயற்சித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து பேசுவதற்கான வாய்ப்பை தடுத்ததாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டை முன்வைத்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைத்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு மேலதிகமாக தண்ணீரை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் அதிக வௌிநாட்டுச் செலாவணியை பெற முடியுமென்பதால், தண்ணீரை ஏற்றுமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2024 இல் நிரந்தர அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஐ.தே.க தெரிவித்துள்ளது. முன்னாள் உள்துறை மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது.

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், உடனடியாக இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களை இருக்கின்றன.இந்நிலையிலே​யே சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.

ரயில் எஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

நல்லாட்சி  மக்களுக்கு மிகவும் சாதகமான காரியங்களைச் செய்தது. ஆனால் அவற்றை மக்களிடம் கூற முடியவில்லை.எங்களது தகவல் தொடர்பாடலில் பலவீனங்கள் இருந்தன அதுதான் காரணம். ஒரு அரசாங்கம் வழக்கமாக என்ன செய்கிறது என்பதை பெரும்பாலும் அவதானிக்க முடிவதில்லை அது இந்த அரசாங்கத்திற்கும் எமது முந்தைய அரசாங்கத்திற்கும் பொதுவானது. ஒரு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் பெரும்பாலும் அவநம்பிக்கையுடனே பாரக்கின்றனர்.

பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி தான் அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினார் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது.

நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி