2024 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பகை காரணமாக ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க தலைவராக பணியாற்றிய போதிலும், அவருக்கு புதிய அரசாங்கத்திடமிருந்து எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு அவரே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பொது அரசியலுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார், அதே நேரத்தில் ஸ்ரீ.ல.சு.க. மூத்த அமைச்சர்கள் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் பசில் ராஜபக்சவை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முனைகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவின் புதிய நடவடிக்கைக்கு முன்னாள் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லட்சுமன் பியதாச மற்றும் தற்போதைய செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெத் நியூஸ் - 'கனின் கோனின்' அம்சத்தின்படி, ஏற்கனவே ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட விவாதங்கள் தொடங்கியுள்ளன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி