ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல் சீனாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது!
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதான நபர் ஒருவருக்கு ஹெச்10என்3 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக 2019- ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் பிடியில் இருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் எச்10என்3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் மனிதரை பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.