இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் இன்று போராட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் (பங்க்) முன் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
ஜூன் 14ம் திகதி வரை கிடைக்கும் கொவிட் தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்தும் பயணத்தடை நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்குமென ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே கூறியுள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில், வேதிப் பொருள்களைக் கொண்டு வந்த ஒரு சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்கரையில் தீப்பிடித்தது - இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவின் தாக்கத்தை இந்தத் தீவு இன்னும் பல தசாப்தங்கள் தாங்க வேண்டியிருக்கும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமை காரணமாக உள்ளூர் தொழில்துறை ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.இதை பிரதமருக்கு தெரிவிக்கும் ஊடக மாநாட்டில், உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ .5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 51.67 லட்சத்தைக் கடந்துள்ளது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
பொலிஸாரின் சித்திரவதைகளினால் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கரிம உரம் அடங்கிய மூன்று கொள்கலன்கள் நகர்ப்புர கழிவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்தின் ஊடக செய்தியாளர் பிரதி சுங்கப்பணிப்பாளர் சுதன்த சில்வா கூறியுள்ளார்.
பால் பண்ணையாளர்களுக்குரிய வசதி வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும் என்று கூறுகின்றார் கல்முனை பிரதேசத்தில் கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு வரும் உதயகுமார்.
உலகில் ஏழு கண்டங்கள் உண்டு என்றுதானே உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட எட்டாவது கண்டம் ஒன்று உள்ளது தெரியுமா...? அதுதான் பிளாஸ்டிக் கண்டம் என்றழைக்கப்படும் பெரிய பசுபிக் குப்பை தீவு அல்லது குப்பை இணைப்பு (Great Pacific Garbage Patch).
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி நீக்கப்படும் என தேசிய கொரோனா ஒழிப்பு நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (08) தெரிவித்துள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை - டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படைப்பிரிவு தெரிவித்துள்ளது.