தென்னாபிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார்.

அடக்குமுறை நோக்கத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக தொற்று நோய் காலத்தில் கூட புதிய தடுப்பு முகாம்கள் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

1969 ஆம் ஆண்டின் இறுதி வாரங்களில், ஒரு கடினமான ஆனால் மிகமுக்கியமான பணியில் டேனியல் எல்ஸ்பெர்க், மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள், கொவிட் தொற்று நாட்டில் அபாயகரமானதாக இல்லை என்று சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சுக்கு சென்று கொண்டிருந்த இமானுவேல் மேக்ரான், அவ்வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரெனெ ஒரு நபர் இமானுவேல்  மேக்ரானின்  கன்னத்தில் அறைந்தார்.

யுத்தத்தின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி மன்னிப்பு கோர வேண்டுமென, இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னஃப் ஜஸீமை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய நாடுகளின் குழு கேட்டுள்ளது

கொழும்பின் பிரபல்யமான இடங்களிலுள்ள நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் செயல் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய காலத்தில், ஒக்சிஜனின்றி எவ்வளவு நோயாளிகள் தாக்குப்பிடிப்பார்கள் என்பதை அறிய சோதனை நடத்தியதாக அதன் உரிமையாளர் பேசியதாக வெளியான காணொளி சர்ச்சையாகியிருக்கிறது.

கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார்.

இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள் கோரியுள்ளன.சுகா

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

முகக்கவசம் இல்லாமல் பாதையில் இருந்ததற்காக,தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் ஜீப் வண்டியிலிருந்து விழுந்து இறந்துள்ளமை தொடர்பில் பாணந்துரை வடக்கு பொலிஸில் துணை பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை ஆபிரிக்க நாடான நைஜீரியா தடை செய்துள்ளது.ட்விட்டர் நிறுவனம் தங்கள் நாட்டு விதிகளை மீறியதாக அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது புஹாரி குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது அந்த வலைதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி