டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ட்ராக்டர் பேரணி தொடர்பாகத் தலையிட முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2021 இல் கொரோனா காரணமாக முன்பள்ளி கல்வியை இழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் முதலாம் வகுப்பில் அவர்கள் சேர்ந்த பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கின்றனர்

தற்போதைய அரசாங்கம் இந்திய செல்வாக்கிற்கு அடிபணியவில்லை, அதை செயலில் காட்டியுள்ளது இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க இவ்வா​றே தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனீசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு.

இறுதிப் போரில் நந்திக்கடல் பிரதேசத்தில் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் இழுத்து வந்து நாய்கள் போல் சுட்டேன் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவின் குற்றஒப்புதல் வாக்குமூலம் நிச்சயம் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமேதான்.

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து  வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை  இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் உண்மைக்குப்புறம்பான கருத்துகளை வெளிப்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதுவருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தலைநகர் அருகே நன்கு அறியப்பட்ட ராஜமஹா விகாரையில் யானை குட்டி ஒன்று நீண்ட காலமாக கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதற்கு எதிராக அமுல்படுத்தப்படாவிட்டால், பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் சட்டத்தரணி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 150 சட்டத்தரணிகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமை சட்டத்தரணிகள் தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கும் சுயாதீனத்தன்மைக்கும் அழுத்தம் விடுக்கக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களுC சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 34 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரித்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிக்குமார், நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி