காத்தான்குடி பிரதேசத்தில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், இன்று (01) மீண்டும் மூடப்பட்டன.

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்திரா தொடர்பான வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹேம்நாத் தொடர்பான விசாரணைகள் முடிவில்லாமல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன, நீதிக்காக காத்திருக்கின்றோம் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகினறனர்.

குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அரபு நாடுகளில் மிக நீண்டகாலமாக பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் திடீரென தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது பலரது வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. இத்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மரணம் குறித்த செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவியது
அரசாங்க உளவுத்துறையின் விசாரணையில் இது அரசாங்கத்திற்குள் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று தெரியவந்துள்ளது.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு அல்லது வேறு தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தான் அதிகாரத்திற்கு வந்தால் உறவினர்கள் நண்பர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி கோத்தாபய தேர்தலுக்கு முன்பு கூறினாலும், இன்று அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தான் வாக்குறுதிகளுக்கு புறம்பாக உறவினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகிறார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல்துறையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக மேற்கு கப்பல்துறையை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கருத்தைக் கேட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றது.

சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாக இராணுவப் பயிற்சி வழங்க இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள் எனவும் கூறினார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆளும் கட்சி அரசாங்கத்தின் மீது நுட்பமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழ் இலக்கியங்களை வளப்படுத்துவதிலும், சிங்கள இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடிப் பாத்திரத்தை வகித்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா நேற்று (28) காலமானார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, உண்மையான தேசபக்தர் அமைப்பின் மங்கள சமரவீர, ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் 43 பிரிவின் பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோர் இணைந்து புதிய முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக செயற்படவுள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி