காத்தான்குடி பிரதேசத்தில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், இன்று (01) மீண்டும் மூடப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள், நேற்று (31) முதல் விடுவிக்கப்படுவதாக காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்தாகக் கூறப்பட்ட நிலையில், இப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

எனினும், அவ்வாறானதொரு தீர்மானம் உத்தியோகபூர்வமாக எடுக்கப்படவில்லையெனவும் அவ்வாறான ஓர் அறிவிப்பு தேசிய மட்டத்திலிருந்து வரவில்லை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, மீண்டும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் கொரோனா நிலைமை காரணமாக 18 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டு, அவற்றில் 8 பிரிவுகள் தவிர்ந்த 10 பிரிவுகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறாதொரு நிலையிலேயே 7 கிராம சேவகர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபை மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறையினரால் இவ்வாறு இந்தக் கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, கடைகள் யாவும் திறக்கப்பட்டு நகரம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தது.

“முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தை விடுவிப்பது தொடர்பில் உள்ளூர் மற்றும் உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையோரின் கலந்தாலோசனை, கள நிலைமைகளின் பின்பே தீர்மானிக்க முடியும் எனவும்
உத்தியோகபூர்வமாக முடக்கப்பட்ட பிரதேசத்தை அல்லது பிரதேசங்களை விடுவிப்பதாயின், அது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்துக்கு நாம் எமது பரிந்துரையை அனுப்புவோம்.

“பின்னர் எமது பரிந்துரையை அவர்கள் கொரோனா தடுப்பு தேசிய செயலணிக்கு அனுப்பி, அவர்களின் இறுதித் தீர்மானத்தின்படியே விடுவிக்க முடியும்.

“இதனை விடுத்து இவ்வாறு உத்தியோகபூர்வமற்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது சட்ட விதிகளுக்குப் புறம்பானது” என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் காத்தான்குடி பிரதேசத்தின் 10 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி