இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இப்போது நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது.

நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்படாது என்றும் நாட்டுக்கு எரிவாயுவை வழங்கும் திறன் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்த லிட்ரோ காஸ் தலைவர் தெஷார ஜயசிங்க, அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி சுமார் 20 ஆண்டு காலம் இணைந்து பயணித்த பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.

(சமபிம கட்சியின் ஊடக அறிக்கை),

இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் பரவுவது பாரிய தொற்றுநோயாக மாறியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் வீரயம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நாளாந்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறான தொற்று பரவுவதற்கான காரணத்தை பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) வெளியிட்டுள்ளார்.

அவரது மகன் விமுக்தி குமாரதுங்க தீவிர அரசியலில் நுழைகிறார் என்று இந்த நாட்களில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறுகின்றார்.

கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் கட்டடமொன்றில் (Diamond Complex) தீ பரவியுள்ளது.தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொதுச்சந்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

43 வீதமாக இருந்த எமது உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் நிரந்தரமான விவசாயக் கலாசாரத்தைத் தேற்றுவிக்க வேண்டும். நிலைபேறான விவசாய உற்பத்தியில் முன்நோக்கிச் செல்வதற்கான ஆரம்பத்தில் தற்போது நிற்கின்றோம். நாங்கள் எங்களிடமிருந்து மறைந்த விவசாயக் கலாச்சாரத்தை மீளக் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு வீடு சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை தடுப்பூசி போடப்படாத இவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு அனைத்து பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.

இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக் கொவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.பண்டாரவளை அரசினர் மருத்துவமனையிலேயே, மேற்படி மரணம் பதிவாகி உள்ளது.

500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் அமைச்சர் கூறுகிறார்.பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய வாய்மொழி வினாவுக்கு பதிலளிக்கும் விதமாக ஆகஸ்ட் 06 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீமை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட ”கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி