சோமாலியாவில் பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு!
சோமாலியா நாட்டில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.
சோமாலியா நாட்டில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் ஜனநாயக உரிமை கேட்டுப் போராடிய மாணவர்கள் ஏராளமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் தியானென்மென் சதுக்கம். தியானென்மென் என்ற பெயரை உலகம் இன்னும் அதிர்ச்சியோடு நினைவுகூர்வதற்கு இந்தப் போராட்டமும், அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு கையாண்ட வழிமுறைகளால் எண்ணற்றவர்கள் கொல்லப்பட்டதும்தான் காரணம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமைகள்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவரின் 75ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 04). ஐம்பது ஆண்டுகால இசைப்பயணம், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள், இசை, நடிப்பு, டப்பிங் என தான் கால்பதித்த துறைகள் அனைத்திலும் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் எஸ்.பி.பி. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் வலம் வந்தவர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் கேரளாவை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் செப்டம்பர் 2012 கார் ஓடியதில் விபத்தில் சூடானைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியானார். சூடான் சிறுவனைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் மரண தண்டனைக்கு உள்ளானார். ஐக்கிய அரபு எமிரேட் சுப்ரீம் கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிசிடிவி காட்சிகள் குற்றத்தை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சுமந்திரன் அவல் என நினைத்து உரலை இடித்திருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் தனது பயணக் கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை புதுப்பித்துள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
லண்டன் உயர்நிலை தீர்ப்பாயம் ஒன்று வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றை அடுத்து ஆஸ்திரேலியா தனது அகதிகள் தஞ்சக் கோரிக்கை தொடர்பான கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார்.
தற்போதைய நெருக்கடியால் ஜனநாயகத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷர்களும், குறிப்பாக ஜனாதிபதியும் பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறார் என முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இளைஞர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் காரணமாக மீனவர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தலைமை வழங்க தான் தயாரக இருப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் சுலாவேசி நகரில் கொடமொபாகு பகுதியில் இருந்து 224 கி.மீ. தொலைவில் இன்று மாலை 3.39 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பானந்துரையிலிருந்து கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையிலான கடலோர மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மீன்பிடித் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.