யாழ் இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.ராகேஷ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

அஸ்ட்ராஸெனகா மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்கும் வரை நகரவாசிகளுக்கு முதல் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்போவதில்லை என்று கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, இன்று தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரச சேவைகளை இன்று (02) முதல் வழமைபோன்று முன்னெடுக்குமாறு   வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண, வலய, கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் இலவசக் கல்வி கொள்கைக்கு எதிரானது என்று அரசாங்கத்தின் பங்காளியான ஜனநாயக இடதுசாரி முன்னணி அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 864 பேர் காயமடைந்து உள்ளனர்.துருக்கியில் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது.  இதனால், பலர் தீயில் சிக்கியுள்ளனர். 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீதி கேட்டு போராடும் தமிழ் மக்களை செல்வமும் அதிகாரமும் கொண்டு அரசு ஒடுக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி வடக்கு,கிழக்கு முழுவதும் தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன.ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன என விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சோமாலியா நாட்டில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர். சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரில் கால்பந்து வீரர்களுடன் சென்று கொண்டு இருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 25 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஜா படத்தில் 'சின்ன சின்ன ஆசை' என்ற பாடலை ஒரு சிறுமி அழகாகப் பாடும் வீடியோயை இசைப்புயல் ஏ .ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாளொன்றுக்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் படப்பிடிப்பு முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பிரபல சிங்கள நடிகை ஹயசிந்த் விஜேரத்ன, லிந்துலை பகுதியில் வைத்து அவர் பயணித்த வேன் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.

இந்த நாட்களில் பேசப்படும் சிறுமி துஷ்பிரயோக சம்பவத்தில் ரிஷாத் பதிதீனின் குடும்பம் சிக்கியுள்ளது. ஆனால் விசாரணை முடிவடையவில்லை.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி