வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபட்ட ஒரு மனிதன் கூட, அவன் கொஞ்சம் அமைதியாக இருக்கும்போது, ​​எல்லோரும் மறந்து விடுகிறார்கள்,

பிபிசி-யுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதித்து அவருக்கும் தனது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது என இனப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய திகதிகளை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.72 கோடியை தாண்டியுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி1617 கொரோனா வைரஸ் திரிபால் சிங்கப்பூரில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அத்தகைய கொரோனா திரிபுகள் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

துறைமுக நகர் சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதால், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் டாலிக் பகுதியில், இன்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

பாடசாலை அபிவிருத்திக்காக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த  திட்டத்தை கைவிட்டு பொதுமக்களின் பொது வரிப் பணத்தை தவறாக பயன்படுத்துவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ற் கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவும், கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர்.(திருமதி).R. ஶ்ரீரிதரின் வழிகாட்டலிலும், கப்பல்துறை தள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் .R. நிரஞ்சனின் மேற்பார்வையிலும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது 50 படுக்கைகளுடன் கூடிய ஒருங்கினைந்த மருத்துவ முறையில் ( சித்த, ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை) COVID-19 நோயாளர்களை சிகிச்சை மையம் வெகு விரைவில் கப்பல்துறை சித்த ஆயுர்வேத தள வைத்தியசாலையில் தொடங்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி