தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் இருவரும் 11ம் திகதி வரை தடுப்புக் காவலில்!
நேற்று (03) பாராளுமன்றத்திற்கு அருகாமையில் நடைபெற்று கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் அரசியல் செயற்பாட்டாளர்களான சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்ஸமாலி ஆகியோர் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.