சிறு குழுவுடன் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் தமிழ் மாவீரர்களை நினைவுகூருவதை தொற்றுநோய் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயற்பட்டுள்ளன.ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஒரு வருடம் கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், மிகவும் சிறப்பாக செயற்பட்ட பத்து உறுப்பினர்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தரப்படுத்தியுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை என இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையான அரசியல் கைதியான முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு குகநாதன் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான மறு நாள் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளது சீனா.
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.
இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி சிறிய நேரத்தினிடையே மதுக்கடைகளுக்கு முன்பாக பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும் அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் முறைப்பாடு செய்யுமாறு Online ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் பதிவான முதல் கொரோனா அலைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் கால் பாகுதிக்கும் குறைவானவர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் பரவி வரும் கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட நிலையில் வீதி விபத்துகளில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அநுராதபுரம் சிறையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய எவ்வாறு தனது பதவியில் தொடர்கிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.
விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை.