மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த லொஹான் ரத்வத்தவை இதுவரையில் கைது செய்யப்படாதது ஏன்? எனக் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷ்யாவில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி Vladimir Putin கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது.

இலங்கை யுவதியான யொஹானியின் (Yohani Diloka de Silva) மெனிக்கே மகே ஹிதே பாடல் தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசும் இடத்தை பிடித்துள்ளது.

பொலன்நறுவையில் அமைந்துள்ள புராதன லங்காதிலக்க புத்தர் சிலை அமைந்துள்ள இடம் இடி விழுந்து சேதமடைந்துள்ளது.

கனடாவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் சரியான முறையிலே நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்? தொடச்சியாக இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து மௌனம் காக்காது நேரடியாக இலங்கை மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடா நாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

ரஷியாவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடும் மாணவர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் நியாயமற்ற ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு பல அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயாதீன அமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிக்கு மேலும் வரிச்சலுகைகளை வழங்க அனுமதிக்கும் மனித உரிமை பதிவுகளை இலங்கை அரசு பின்பற்றுகிறதா என்பதை ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லராக மாற முயற்சிப்பதாக இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கோட்டாபய ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ள உறுதி

மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் யார் அனுமதி வழங்கியது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி