பொலஞ்ஜா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.
நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளார். இதன்படி, அவர் மத்திய வங்கி ஆளுநராக அடுத்த வாரம் நியமிக்கபடவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
கொடிய கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவதற்கான காரணத்தை பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அம்பாறை – தமன பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 23 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.நேற்று (10) மாலை வீசிய பலத்த காற்றினால் தேவாலஹிந்த பகுதியில் 21 வீடுகளுக்கும் திம்பிரிகொல்ல பகுதியில் 02 வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக தமன பிரதேச செயலாளர் உதார நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன்.
நண்பன் விவேக் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று 1,596- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட உயர்ந்துள்ளது.
ஐ.நாவிற்கு அனுப்ப இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை தயாரித்தது உண்மை தான் என்றும் , ஆனால் தாம் அதனை அனுப்பவில்லையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்துள்ளார்.
சீனி, அரிசி மற்றும் நெல் மாபியாவை ஒடுக்குவதாகக் கூறி நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றிய அரசு, ஆசிரியப் போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்சவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய 24 வயதுடைய பதுளை – ராகல பகுதியைச் சேர்ந்த பொலிஸ் காண்ஸ்டபிளே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் முதல் பகுதி இது.
அரசாங்கம் நண்பர்களுக்கு மட்டும் சேவையாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.