கொழும்பு பாலத்துறையில் விளையாட்டு வீரரை கடத்தி கொலை செய்தது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மட்டக்குளி இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஒருவர் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குருணாகலில் ஊடகங்களிடம் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னணி வைத்தியர் தொழிற்சங்கம் பரிந்துரைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்துள்ள நிலையில் அதில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் தரவுகள் தளத்தில் களஞ்சியப்படுத்திருந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் எபிக் லங்கா டெக்னொலொஜி தனியார் நிறுவனத்தின் உதவிப் பொறியியலாளரொருவர் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் நேற்று (28) கைது செய்யபட்டுள்ளார்.

ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, ஜப்பானின் அடுத்த பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்க உள்ளார்.

தமிழ் மாவீரர்களின் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, பலவந்தமாக மக்களை கைது செய்யும் அரசாங்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாக சர்வதேசத்திற்கு  உறுதியளித்துள்ளது.

இந்த நாட்டின் தற்போதைய இளைஞர்களை சித்தாந்தம் மற்றும் நடைமுறை மூலம் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது மறைந்த மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுதந்திர மையம்' திட்டத்தை தொடர வேண்டியது காலத்தின் தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“மெனிகே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடல் மூலம் சர்வதேச புகழ்பெற்றுள்ள இலங்கை பாடகியான யொஹானி டி சில்வா, இந்திய இசைத்துறையில் பிரவேசித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களின் மனங்களை எந்த காலத்திலும் வெல்லமுடியாது என்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜயந் தெரிவித்தார்.

ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா இலங்கையை போல வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளதாக அந் நாட்டின் செல்வந்தப் பெண்மணியொருவர் எச்சரித்துள்ளார். இதனை 31 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை கொண்ட அவுஸ்திரேலியாவின் செல்வந்தப்பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் (Gina Rinehart) தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவின் வடமேற்கே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி