மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனபரிபாலனத் திணைக்களம், எல்லைக் கற்களைப் போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு, சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பதிவு (திருத்த)  சட்டமூலம் நடைமுறைக்கு வருவதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் வாக்களிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மையினருடன் இணைந்து செயற்பட ஜேவிபிக்கு விருப்பமில்லையா? என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சீமெந்து வாங்க மக்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. சிமெந்து தட்டுப்பாடு காரணமாக சிமெந்து தொடர்பான பல தொழில்கள் முடங்கியுள்ளதாக சீமெந்து வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை - போமுவெல பிரதேசத்தில், சட்டவிரோதமாகக் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவர்களைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது சந்தேக நபரும், பெண்கள் மூவரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் இலங்கை தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் அதற்குரிய முன்னோடி பரப்புரைகள் அடுத்தடுத்து வித்தியாசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீன தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையில் உள்ள சீன தூதரகம், பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், சீன வர்த்தக அமைச்சுக்கு இன்று (29) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சண்டித்தனமான பேச்சுக்களால் என்னை பயமுறுத்த முடியாது என அத்துரலியே ரத்ன தேரர் அரச தலைவர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்'கின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய பெயராக மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

ஆட்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மக்களைக் கொன்று காணாமல் ஆக்குவது நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக, நாட்டின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பசளையை வழங்க ராஜபக்ச கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக கண்டனப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் முடிவால் அரசாங்கத்தின் கூட்டாளிகள் பீதியடைந்துள்ளனர் இதனால் கூட்டு கட்சிகளின் தலைவர்களை வசப்படுத்தும் பாரிய நடவடிக்கையை அரசாங்கத்தின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் ஹங்குரன்கெத்த - ரூக்வூட் தோட்டத்தில் வசிக்கும் முன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் சிறுவன் சஞ்ஞீவன் பலரையும் வியக்க செய்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி