காணி சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக பேராயர் ரிட் மனு தாக்கல்!
அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.