டீசல் இல்லாத காரணத்தினாலேயே ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

கோட்டா(Gotapaya Rajapaksa), மகிந்த(Mahinda Rajapaksa) தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் இலங்கை மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று   எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பகுதி மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷியாவில் துப்பாக்கி  குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ரஷியாவின் ரைசான்  பிராந்தியத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மங்களவுக்கு எப்போதும் அரசியல் ஈர்ப்பு உண்டு. அவரது முப்பது வருட அரசியலும் அறுபத்தைந்து வருட வாழ்க்கையும் விசித்திரமானது. அவர் ஒரு அழிக்க முடியாத அரசியல் சின்னம். ஒரு தெளிவான அடையாளம்.

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

உலகின் 116 நாடுகளில் மேற்கொள்ளப்பட் கணக்கிடப்படும் பட்டினி குறியீட்டில் சென்ற வருடம் 64ம் இடத்திலிருந்த இவ்வருடம் 65வது இடத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ள அழகிய வனப்பான இலங்கை நாடு இப்போது, கடனுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட்டுள்ளது. இலங்கை கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு சந்தித்திருப்பதாக, இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக 3.6 பில்லியன் டொலர் கடன் வழங்க ஓமான் நாடு இணங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார். இது சம்பந்தமான ஒப்பந்தம் விரையில் ஒப்பமிடப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று (21) நடைபெற்ற ஆசிரியர் வேலைநிறுத்தம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

சேனநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய பரம்பரையைப் போன்று ராஜபக்சர்களின் அரசியல் இருப்பும் விரைவில் நிறைவிற்கு வரும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு முன்னால் மன்னாரில் இருந்து சென்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலைமையை அடையும் என்பது நிச்சயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka)தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை நடந்ததை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு தாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெற்கில் உள்ள சிரேஸ்ட இடதுசாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி