இந்தியாவில் காடுகளை அழிக்கும் திருத்தச் சட்டத்தை கொண்டுவருகிறது பா.ஜ.க அரசு!
இந்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ` காடு என்பது மரங்கள் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களையும் சேர்த்துத்தான். காடுகளை அழிப்பதற்காகவே இப்படியொரு சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வருகிறது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.