தமிழ் பேசும் கட்சிகளின் உரையாடல், தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு சாதகத்தை தரும் வகையிலும் பொதுமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலும் தமது போராட்டம் அமையாது என்று இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடால் உடனடியாக வெளியேறுங்கள். எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள் என மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa).

போதைப்பொருள் வர்த்தகம் உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பெரும் தடையாக இருக்கின்றதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தில் நிபந்தனை அடிப்படையில் அரிசி மற்றும் சீனி விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான் (Sivanesathurai Santhirakanthan)), நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) பகிரங்க சவாலொன்றை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் இன்று பல்வேறு இடங்களிலும் தொழிற்சங்கப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.யுகதனவி மின்சார நிலையத்தை அமரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மின்சாரசபை பணியாளா்கள், கொழும்பில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனா்.

‘ஒரே நாடு, ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி யை ரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமான போராட்டத்திற்கு ஆதரவாக நாடு பூராவும் பாடசாலைகளின் முன்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட செயலணிக்கு மகாநாயக்க தேரரால் பரிந்துரைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் எாிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் வந்து இணையும்படி இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி