நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சீமெந்து வாங்க மக்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. சிமெந்து தட்டுப்பாடு காரணமாக சிமெந்து தொடர்பான பல தொழில்கள் முடங்கியுள்ளதாக சீமெந்து வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொழில் வீழ்ச்சியால் சீமெந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யுமாறு நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் சில பிரதேசங்களில் சீமெந்து பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்துநிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதன்படி சீமெந்து கொள்வனவு செய்வதற்கு இன்று (30) அதிகாலை 3.00 மணி முதல் தம்புள்ளையில் உள்ள கடையொன்றுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டியிருந்ததாக சீமெந்து பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை, தம்புள்ளை கிராமத்தை அண்மித்த கடையொன்றுக்கு நேற்றிரவு (29) சீமெந்து லொறி வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இவ்வாறு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 3.00 மணி முதல் பல்வேறு நேரங்களில் மக்கள் வந்து கடைகளை திறக்கும் வரை வரிசையில் நின்றதாகவும் , ஒருவருக்கு 5 மூடை சிமெந்தே வழங்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

கடை ஊழியர் வாடிக்கையாளர்களின் வருகையைப் பார்த்து பட்டியலைப் பெற்று மக்கள் தொகைக்கு ஏற்ப சீமெந்து விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வரிசையில் நின்ற பலர், கடந்த காலத்தில் சிமெந்து வாங்குவதற்கு இவ்வளவு சிரமப்பட்டதில்லை என கூறியுள்ளனர்.

உலகில் தற்போது நிலவும் சூழ்நிலையால் நாடு இவ்வாறான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி