ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மார்ச் 2 ம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஜூன் 20 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவுக்கு  தெரிவித்திருந்தார்.

நிரந்தர வருமானமற்ற தொழிலாளர்கள், நாட்டில் அவ்வப்போது அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட மத்திய வங்கியின் நாணய வாரியத்தை மாற்றுமாறு மத்திய வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி கோதபாய ­­கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியத்தை கண்டறிய சிங்கள விஷேட அதிரடி குழு ஒன்றை நிறுவி அதனை விஷேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நேற்று (ஜூன் 2) முதல் தொடங்கியுள்ளதாக அரச அச்சு திணைக்களத்தின் கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் நடேசனை சுட்டுக்கொன்ற கொலைகாரர்களை இலங்கை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.அவரது 11 வது நினைவேந்தலுக்காக உளவுத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை புறக்கணித்து, அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பௌத்த அமைப்பு ஒன்று, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மக்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை மீளத் கையளிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

அலுத்கம தர்கா டவுனில் 14 வயது சிறுவனை அலுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு தாக்கியுள்ளதாக அந்த சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகர சிறை அதிகாரிகளால் ஒரு கைதி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன.

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ​​அரசாங்கத்தை எவ்வளவு விரைவாக கவிழ்க்க முடியும் என்பது பற்றி யோசித்தோம். எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை பின்பற்றி தேர்தலை நடத்தும் போது திட்டமிட்ட எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளை விட அதிகமான வாக்கு சாவடிக ல் அவசியம் தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ திசானநாயக்க கூறியுள்ளார்.வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கும் போது அதிகளவான கட்டிடங்கள் தேவைப்படும்  இது ஒரு சவால் நிறைந்த காரியமாக உள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி