கூட்டணி இல்லை மொட்டிலே வருவோம் – பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீலங்கா நிதகஸ் பக்ஷய ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீலங்கா நிதகஸ் பக்ஷய ஆகிய கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (14) அதிகாலை நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் கிடைக்கின்றது.பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே. கட்சியின் பொதுச் செயலாளரான கரு ஜயசூரியவை நியமித்து அன்னச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ரணில் அணியினர் சஜித் அணியினருக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி 110 - 120 விற்கு விற்ற போலந்து நாட்டு பெரிய வெங்காயம் 190 - 200 ரூபா வரை விலை உயர்ந்துள்ளது. 110 - 120 ரூபாவிற்கு விற்ற பாகிஸ்தான் நாட்டு பெரிய வெங்காயம் 230 ரூபாவாக விலை உயர்ந்துள்ளது. 120 ரூபா விற்ற எகிப்து நாட்டு பெரிய வெங்காயம் 190 ரூபா வரை விலை உயர்ந்துள்ளது.
இது சம்பந்தமாக வியாபாரிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பில் பெரிய வெங்காயத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகன் தரணி சிறிசேன சட்டத்தரணியாக கடமையேற்றதும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான வழக்குகளை சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ வழக்காடுவது போல் தானும் மைத்திரி குடும்பத்திற்காக சட்டத்தரணியாக ஆஜராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஊடாக பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் பிரபல சிங்கள நடிகை ஒஷாடி ஹேவாமத்தும போட்டியிடவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இயற்கையை பாதுகாக்க அச்சமின்றி எழுந்து நின்ற வன ஜீவராசி திணைக்கள அதிகாரியான தேவானி ஜயதிலகவை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
விமல் வீரவன்ச தம்மீது சுமத்திய குற்றசாட்டுக்காக மன்னிப்பு கோராவிடின் 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அறியப்படுகின்றது.
ஐ .தே .கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு கட்சியின் உறுப்புரிமையை எடுத்துள்ளதாக ரணில் கூறுகின்றார்.
சஜித் வேறு கட்சிக்கு போய்விட்டதாக ரணில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்கள சபை “சமகிஜனபலவேகய” அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தகவல்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
சஜித் பிரேமதாசாவின் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர் “சமகி ஜன பலவேகய “அதனது சின்னம் இதயமாகும் தேர்தல் காரியாலயத்திலிருந்து வரும் தகவல் மூலமாகவே அறியக்கிடைக்கின்றது.
சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் அவரது செயல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள அசைவுகளை மூடி மறைக்க முடியாது என்று மாத்தறையில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நகுலேஸ்வரன் நிரோஜினி எனும் பெயருடைய இரு பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்கு வாதத்தை உருவாக்கிய நளின் டி சில்வா தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது