சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கையை யாரும் காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் எந்த காலத்திலும் தான் செய்த குற்றங்களை விசாரிக்காது. அதனால் தான், நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

எனினும், சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கத்தை கொண்டு செல்வதாயின் அது இன்னொரு நாட்டால் மட்டுமே முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கை போர்குற்றத்தில் ஈடுபட்டதாக இன்னொரு அரசாங்கம் குற்றம்சாட்டி இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க முடியும் என்றார்.

இதேவேளை, ஜெனிவா அமர்வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி கையொப்பமிடுமென எதிர்பார்ப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எனினும், கடிதத்தின் இறுதி வடிவத்தில் கொள்கையளவில் சகலரும் கையொப்பமிட்டுள்ளதால் அவற்றை பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் இணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தை பலப்படுத்தும் வகையில், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, தமிழ் தேசிய பேரவை சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக சுமந்திரன், எஸ்.சத்தியலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் சிவில் சமூகம் சார்பாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போது, அதில் கடிதம் தொடர்பில் ஆராயப்பட்டு, அக்கூட்டம் நிறைவடையும் போது, அது தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு இணங்குவதாயின் அது தொடர்பில் நாளை மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூக அமைப்புகளையும் சந்தித்து தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ள கடிதத்தின் பொருளை மாற்றாமல், அவற்றை பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை பரிசீலிக்க தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எனினும், அவற்றில் உள்ள அம்சங்களை அகற்றுவதற்கு உடன்படவில்லை எனவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பின்னர் கடிதத்தை வெளியிடுவதை தாமதிக்க முடியாது என்பதை எடுத்துக்கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி