பஸ் முன்னுரிமைப் பாதைச் சட்டம் மீண்டும் அமலுக்கு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி வீதியை அண்மித்த பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்தார்.