அமைதிப் போராட்டத்தில் ஈடுபடடவர்களை தாக்கி கைது செய்தமை தொடர்பில் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு!
முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் படுமோசமாகத் தாக்கி அடாவடித்தனமாக கைது செய்தமைக்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி கடந்த 12ம் திகதி மனித உரிமைய ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.