மாவீரர்களை உறவினர்கள் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது!
மாவீரர் தின நிகழ்வுகளை பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை விண்ணப்பங்களை யாழ்.மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.