கல்முனை கிரீன் பீல்ட் மக்களின் மிக நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த தனித் தண்ணீர் மாணி வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வீட்டுத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித் தண்ணீர் மாணி வழங்கும் நிகழ்வு இன்று(15) திங்கட்கிழமை காலை 9.30க்கு கிரீன்பீல்ட் வளாகத்தில் நடைபெற்றது.

கிரீன்பீல்ட் ஆதன வீட்டு திட்டத்தில் சுமார் 451 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுவரை காலமும் ஒவ்வொரு குடும்பங்களுக்குமான தனித் தண்ணீர் மாணி வழங்காமல் அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.தற்போது ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்குமான தனித் தண்னீர் மாணி வழங்கப்பட்டதனால் அங்குள்ள மக்களின் மிகப் பிரதானமான பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக நீர்வழங்கல் வடிகலாமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் எம்.ரி பாவா,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரோஸன் அகதர்,எம்.எஸ்.நிசார்(ஜேபி), ஏ,சி,ஏ சத்தார்,ஏ.எம் பைறோஸ்,கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி,கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், இஸ்லாமாபாத் அமைப்பாளர் பி.டி ஜமால்,கல்முனை 12ம் வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.பழீல்,தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி.ஜெளபர் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா,உட்பட கிரீன் பீல்ட் செயற்பாடு குழுவினர் மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி