இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 12வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை உண்ணாவிரத போராட்டகாரர்கள் பயன்படுத்திய பதாதைகள் இனம் தெரியாதவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்;டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 03ம் திகதி முதல்   சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று 12 வது நாளாகவும் தொடர்கிறது.

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இன்றைய போராட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட மதகுருமார், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,  மற்றும்;, அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்

இதே வேளை போராட்டக்காரர்களின் கொட்டகை மற்றும் பதாதைகள் அகற்றப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் காலை முதல் சுடும் வெயிலிலும் தமது உணவுதவிர்ப்பு சுழற்சி முறையிலான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி