ரஜினிகாந்தின் உடல்நிலையில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியல் முடிவு குறித்து சிந்தியுங்கள் என கூறியிருப்பதாக அவரை சந்தித்து விட்டு வந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இன்று பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் ” புரவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கொவிட்-19 தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் சடலங்களை, அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களால் ஏற்கப்படாவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் பின்னர் நேற்று (30) நாள் பூராவும் கைதிகளுக்கு உணவு வழங்கப்படவில்லையென செய்திகள் கூறுகின்றன. 

இலங்கை அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறைச் செயற்பாடுகள், காலத்திற்குக் காலம் வலுப்பெற்றுவருகின்றன. இந் நிலையில் இலங்கை அரசின் இத்தகைய தமிழர்கள்மீதான அடக்குமுறைச் செயற்பாடுகளை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சர்வதேசம் வேடிக்கை பார்க்கப்போகின்றது. இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விடயத்தை "தவறான செய்தி புனைகதை" என கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்ப முயல்வதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில் இன்றைய வழக்கில் அது சாதகமாக இருக்கும் என தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்தார். தமது உறவினர்களின் சடலங்களை எரிப்பதற்கு அவர்களின் உறவினர்கள் கையெழுத்திடாமல் மறுத்து வரும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் பலாத்காரமாக கையெழுத்து பெற பொலிஸார் முயல்வதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக் காலம் முடிவுக்கு வரும் தருணத்தில் இந்த சம்பவம் மேற்குலகம் மற்றும் இஸ்ரேலுடனான மோதலை வலுக்கச் செய்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டிற்கு வர வேண்டுமெனக் கேட்ட வெளிநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை உழைப்பாளிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சௌதி அரேபியாவிற்கு உழைப்பாளிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நேற்று (28) கொரோனாவினால் 8 பேர் இறந்துள்ளனர் . கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 107க அதிகரித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி