புனித ரமழான் மாத தலைபிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று(12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென பிறைக்குழு அறிவித்துள்ளது.

சீனாவின் மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். அரிதிலும் அரிதாக சீனா தன் பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல அமைந்திருக்கிறது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவடாவில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்டை கொன்றுவிட்டதாக பொலிசார் கூறுகின்றனர். அதே நேரம், பிஜப்பூரில் ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 வாகனங்கள் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொளுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெவ்வேறு வெளியீடுகள் மூலம் சமூக ஊடகங்களில் இது வரை வெளிவராத பல விடயங்ளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் ஹிமாஷி கருணாரத்னா தனது புதிய வலைத்தளமான colomboplus.com நேற்று (10) அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிள்ளையான் "மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரா" அல்லது "மாவட்ட அழிவுக் குழுத் தலைவராக"  நியமிக்கப்பட்டாரா என்று எனக்கு சில நேரங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. என்று இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

பண்டுவஸ்னுவர கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு புதிய பணிப்பாளர்களை நியமிக்கும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அரசு சார்பு இணையத்தளம் 'லங்கா சி நியூஸ்' தெரிவித்துள்ளது.

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை.தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷர்ரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.

"எந்தவொரு கட்சியும் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நீங்கள் இரகசியமாக முகமூடிகளை அணிந்து வெளியே நடனமாடுகிறீர்கள். நாங்கள் எப்போதும் வெளியே இருக்கின்றோம்.பொதுஜன பெரமுன எந்தக் கட்சிக்கும் அஞ்சாது. பொதுவாக நாய் வாளைச் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையது. நாய் தான் நடனமாடுகிறது. ” என்கிறார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.

யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பதுளை வீதி மரப்பாலம் பஸ்தரிப்பு நிலையத்தின் அவல நிலை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் அவர். ஆகவே இரு-பரிமாணச் சித்தரிப்புகளை மட்டுமே நாம் எடின்பரோ கோமகனை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. கடுமையான சொற்களை வீசும் நாவையும், முன்கோபத்தையும் கொண்டவர். எரிச்சலூட்டும் ஜோக்குகளைக் கூறிய மனிதர், அரசியல் ரீதியாகத் துல்லியமற்ற கருத்துகளைக் கூறியவர். எங்கும் எப்போதும் இருக்கும் விசித்திரமான பெரிய மனிதர். அவர் மீது மக்களுக்கு எப்போதும் பாசம் உண்டு. தன்னையும் சுற்றியிருக்கும் பிறரையும் சங்கடப்படுத்தியவர். இவைதான் அவை.

நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி