அறிவூட்டலும் ஆர்வமூட்டலும் தடுப்பு மருந்தா? பாணியா?
”கொரோனா தொற்றுக்கு வெக்சின் தாராங்க எல்லாருக்கும் கிடச்சா நல்லாருக்கும். ஏன்னா நோய் குணமாகிருமே?” என்கிறார் திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் இர்பான், ”எல்லாருக்கும் ஊசிய போட்டுட்டா வேல முடிஞ்சுரும். நோய் வராதே” என்கிறார் கொழும்பைச் சேர்ந்த நிர்மலன் சுவாமிநாதன். ”அதான் ஊசி வந்துட்டே பிறகென்ன எல்லா இடத்துலயும் சுற்றித்திரியலாம். வழமபோல எங்கட சோலிய பாக்கலாம்” என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவசிதம்பரம் கிரி.