உலக சுகாதார நிறுவனம் (WHO) சிக்கன்குன்யா எனும் நுளம்பு மூலம் பரவும் வைரஸ் பற்றிய அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியாக இருக்கும் டயானா ரோஹாஸ் ஆல்வரஸ் கூறுகையில்,

உலகம் முழுவதும் 119 நாடுகளில் வசிக்கும் சுமார் 5.6 பில்லியன் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்றனர்.

"2004-2005 ஆம் ஆண்டுகளில் உலகம் தாண்டிய பரவல் ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுகிறது," என அவர் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் சிறிய தீவுகள் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

2025இன் தொடக்கத்தில் இந்த புதிய பரவல் இந்தியப் பெருங்கடல் தீவுகளான ரீயூனியன், மயோட்டே மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் பெரும் அளவில் பரவத் தொடங்கியது.

ரீயூனியனில் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா, மற்றும் தெற்காசிய (இலங்கை உட்பட) போன்ற நாடுகளிலும் பரவல் தொடங்கியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி