பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தனது உலக திருமதி அழகுராணிப் பட்டத்தை திருப்பிக் கையளிப்பதாக கரலின் ஜுரி அறிவித்துள்ளார்.

பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர், சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாவும், வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்படும் என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

வரும் நாட்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகும், எந்தத் திகதியில் கொரோனா உச்சம்பெறும், பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற சந்தேகங்களும் அச்சமும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிரமாண்டமான விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகளை நடத்துவோருக்கும் இருக்கிறது.

உலக திருமதி அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த (ஏப்ரல் 7) ம் திகதி தொழிலாளர் போராட்டத்தின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்காமைக்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு

நச்சு உணவுகளை இறக்குமதி செய்வதில் உள்ள அனைத்து தவறுகளையும் மறைத்து இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சித்திகா சேனாரத்னவை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

லண்டன் நகரத்தில் உள்ள பிரிட்டனுக்கான மியன்மார் தூதரகத்திலிருந்து, அந்நாட்டின் தூதர் வெளியேற்றப்பட்டார்.க்யாவ் ஸ்வார் மின் பிரிட்டனுக்கான மியன்மார் தூதர். மியன்மார் தூதரகத்தின் ராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி க்யாவ் ஸ்வார் மின் மியன்மார் நாட்டின் பிரதிநிதி அல்ல எனவும் அந்த ராணுவ அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அடுத்தவாரத்தில் இருந்து எல்லையற்ற இணைய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி