இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு குழந்தை பேறு அதிஷ்டம் கிட்டியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலையில் சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறந்த  நாடகம் ஆடுகிறது என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர் (Pfizer)  கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

மஹரகம நகரசபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற  கைகலப்புச் சம்பவத்துடன்  தொடர்புடைய நகரசபை உறுப்பினர் நிஷாந்த விமலசந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாண மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரையும் வாக்குமூலம் வழங்க வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைத்துள்ளார்.

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதோ, அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதோ அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மாறாக துறைமுகநகரத்தை இலங்கை சட்டத்திற்குள் அடங்காதவாறு எவ்வாறு சீனாவிற்கு வழங்குவது என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளது என்று உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 23-வது முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்ணர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். 

கொரோனா தொற்றுநோயிலிருந்து கைதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கையில் சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முன்னணி அமைப்புகளில் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளருடன் தொடர்ந்து செயற்பட முடியாது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது   இன்று காலை ஒன்பது முப்பது மணி  அளவில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற 47வது அமர்வின் போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க நுகேகொடை நீதவான் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்றங்கள் தீர்மானித்துள்ளன.

தெற்கில் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்நிற்கத் தயார் என வடக்கின் தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன வேறுபாட்டை பொருட்படுத்தாமல், பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க வடக்கு, தெற்கு என பாகுபாடின்றி செயற்படத் தயார் என யாழ். ஊடக மையம் அறிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி