இன்றைய தினம் பாராளுமன்றத்தில். சாணக்கியன் எம்.பி   பேசும் போது   புலி என்று கூறியவருக்கான  பதிலடியுடன் இன்றைய தின உரை, Covid 19 இன் மூன்றாவது அலையினை எமது நாடு எதிர்நோக்கியுள்ளது. 700 பேர் மட்டில் இறந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விசாரிப்பதற்கென இதற்குரிய ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். எம் நாட்டு மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்பதனை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதை நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்துவதாக இருந்தால், அதுதொடர்பான தீர்மானத்தை சுகாதாரப் பிரிவினரே மேற்கொள்ள வேண்டும். என்றாலும், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது. 

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தாலும் கூட, சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை விடுவிப்பதில், ஐக்கிய மக்கள் சக்தி தீவிர கரிசனை காட்ட வேண்டுமென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

2020ஆம் அண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்கள் இரண்டாவது டோஸாக மற்றொரு தடுப்பூசியைப் பெறவுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் மூன்று மாதங்களுக்கு நோயைக் குறைக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.

நாட்டை முழுமையாக முடக்கினால் பட்டினி மரணம் ஏற்படுமெனத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவ சோதனைச் சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மற்றுமொறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை கிடையாது . தற்போதைய தேவைக்கு போதுமான அளவு ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. தேவையாயின் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் சில பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி