மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளருடன் தொடர்ந்து செயற்பட முடியாது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது   இன்று காலை ஒன்பது முப்பது மணி  அளவில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற 47வது அமர்வின் போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்று கொண்டிருக்கும் அரசியல்,அதிகார  கருத்து முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்குமி டையில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதானா கணக்காளர் மன அழுத்தம் காரணமாக 1 மாத கால விடுமுறையில் இருப்பதால் மட்டக்களப்பு மாநகர சபையில் வேலை செய்யும்   தொழிலாளிகளின் மாதாந்த கொடுப்பனவு கொடுப்பதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக சபையில் மாநகர ஆணையாளருக்கு எதிராக  பிரேரணை ஒன்று நிறைவேற்ற முதல்வரால் பரிந்துரை செய்யப்பட்ட  போது எதிர் தரப்பு உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்த நிலையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

b.jpg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி