இலங்கை நாடாளுமன்றத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளமான Manthri.lk வலைத்தளத்தின்படி, அவர்களில் இருவர் சிங்கள மக்கள் பிரதிநிதிகள், மற்ற இருவரும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்.

2021 ஏப்ரல் மாதத்தில், நாடாளுமன்றம் 09 நாட்கள் நடைபெற்றது.

அவை ஏப்ரல் 5, ஏப்ரல் 6, ஏப்ரல் 7, ஏப்ரல் 8, ஏப்ரல் 9, ஏப்ரல் 20, ஏப்ரல் 21, ஏப்ரல் 22, ஏப்ரல் 23,ஏப்ரல் ஆகிய தினங்களாகும்.

இலங்கையில் சிரேஸ்ட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இருவர் ராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் பழணி திகாம்பரம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள்கூட நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இராஜங்க அமைச்சர் விமலவீர திசானாயக ஆகியோரும் ஏப்ரல் 2021 ல் நடந்த நாடாளுமன்றக் அமர்வுகளில் ஒரு நாள்கூட கலந்து கொள்ளவில்லை என்று Manthri.lk வலைத்தளம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 224 நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஏப்ரல் மாதத்தில் ஏப்ரல் 21 இல் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அன்றைய அமர்வில் 190 மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர், 34 பேர் கலந்து கொல்லவில்லை.

E0nUs8kVkAQHUKc


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி